மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள HCL டெக் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 40 வயதான நிதின் எட்வின் மைக்கேல், அலுவலகத்தின் கழிப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்தார். மூத்த ஆய்வாளராக பணியாற்றிய எட்வின், நீண்ட நேரமாகியும் தனது பணியிடத்திற்கு வராததால், சக பணியாளர்கள் அவரை காணப்போக, அவர் கழிப்பறையில் கீழே வீழ்ந்தபடி இருந்ததை கண்டனர்.

உடனடியாக தகவல் பெற்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது என்ற சந்தேகத்தில், போலீசார் இச்சம்பவத்தை தீவீரமாக  விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அவரது சக பணியாளர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மைக்கேலுக்கு திருமணம் ஆகிய நிலையில் 6 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், போலீசார் நிதின் எட்வினின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.