டெல்லியில் இருந்து நியூயார்க் நோக்கி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பெண் பயணித்தபோது, அவர் பெற்ற உணவில் ஏற்பட்ட பிரச்சனை களமாகியுள்ளது. பயணத்தின்போது வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக அவர் புகார் செய்துள்ளார். இந்த விஷயம் அவருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்ணின் 2 வயது குழந்தை ஆம்லெட்டை பாதியளவு சாப்பிட்ட பிறகே, அவர் அதில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுபிடித்தார். இதனால் அவரது குழந்தைக்கு உணவுக் கெட்டுப்போய் புட் பாய்சனிங் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த விவரத்தை X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் இந்த விவகாரத்தில் அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடுவையும் டேக் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதால், ஏர் இந்தியா விமான சேவைக்கு எதிராக மக்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Found a cockroach in the omelette served to me on the @airindia flight from Delhi to New York. My 2 year old finished more than half of it with me when we found this. Suffered from food poisoning as a result. @DGCAIndia @RamMNK pic.twitter.com/1Eyc3wt3Xw
— Suyesha Savant (@suyeshasavant) September 28, 2024
“>
