தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று தான் போட முடியும். ஏனென்றால் ஊருக்குள் பெட்ரோல் பங்க் கிடையாது.

இதனிடையே 4 அண்ணன்-தம்பிங்களும் பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். தினசரி காலை, மாலை பால் விற்பனை செய்ய பைக்கை எடுத்து சென்று வந்தனர். இதன் காரணமாக பெட்ரோல் செலவு அதிகமாகியது. அதனால் பெட்ரோல் பைக்குகள் அனைத்தையும் எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றி விடலாம் என அவர்கள் நினைத்துள்ளனர். அதே நேரம் மூத்த அண்ணன் ஏற்கனவே எலெக்ட்ரிகல் பற்றி கொஞ்சம் அறிந்தவர் என்பதால் அவர்களுக்கு இத்தொழில் தொடங்க எளிதானது.

அதன்பின்  சுற்றுவட்டார பகுதியில் இருப்பவர்கள் இந்த தகவல் அறிந்து இதேபோன்று தங்களுக்கும் செய்து தருமாறு கேட்டுள்ளனர். அந்த வகையில் எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றிக்கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல் பைக்கை தயார் செய்து கொடுப்பதற்கு அதிக லாபம் இன்றி அந்த பொருளுக்கு உண்டான பணத்தை மட்டுமே வாங்கிக்கொண்டு தயார் செய்து கொடுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.