சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம் என தொண்டர்களுக்கு தெரியும். அந்த பெயரை உச்சரிக்கும் தகுதியைக்கூட அவர் இழந்து விட்டார்.

அ.தி.மு.க சட்டவிதிகளை காக்கவே 2-வது முறையாக தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று பேசினார். அதன்பின் அ.தி.மு.க எனும் தொண்டர்கள் இயக்கத்தை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எனவும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா என முப்பெரும் விழாவை அடுத்த மாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.