முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ஈரோடு கல நிலவரமானது சிறப்பாக இருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்கு தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஜனநாயகம் வெல்லுமா (அ) பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். இதனிடையே கமல்ஹாசனின் கொள்கை பணத்திற்கானது மட்டுமே ஆகும். கமல்ஹாசன் விளம்பரத்துக்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார். படம் நடிப்பதை விட பணம் அதிகமாக தருவதாக சொல்லி இருப்பார்கள்.

அதனால் தான் கால் சீட் இங்கு கொடுத்திருப்பார். கமல்ஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பதில்லை. கமல்ஹாசனின் பேச்சை கேட்டால் ஓட்டுபோடுபவர்களும் போட மாட்டார்கள். கமல்ஹாசன் பேச தெரியாது, பேசினாலும் அது மக்களுக்கும் புரியாது. தி.மு.க நேற்று வந்த கட்சி இல்லை, ஆட்களை பார்த்து யாரை எப்படி ஆப் செய்யவேண்டும் என்பது தெரியும். அதேபோல் கமல்ஹாசனை எந்த விதத்தில் ஆப் செய்தார்கள் என தெரியவில்லை” என அவர் பேசியுள்ளார்.