கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல அரசு ஊழியர்கள் இல்லங்களில் இருந்தே பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டனர். தொற்று குறைய தொடங்கியதும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. மேலும் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கிய காலத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊழியர்கள் பலரும் அலுவலகங்களுக்கு சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் அவர்கள் அலுவலகங்களுக்கு செல்லாத காலங்களை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகள் வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021 மே 10-ஆம் தேதி முதல் ஜூலை நான்காம் தேதி வரையிலான பொதுமுடக்க  காலகட்டத்தில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வேலை நாட்களாக கருதப்பட்டது. ஆனால் சுகாதாரம், வருவாய்,  தலைமை செயலகம், காவல், ஊர்க்காவல் படை, பேரிடர் மேலாண்மை, உணவு, கூட்டுறவு, மின்சாரம், உள்ளாட்சித் துறை, தீயணைப்பு, சமூக நலன், கருவூலம் ஆகிய துறைகள் அத்தியாவசிய துறைகளாக கருதப்பட்டு சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பாக விடுமுறை எடுத்தவர்கள் அந்த விடுமுறை முடிந்து பொது முடக்க காலத்தில் பணியில் சேர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் அவர்கள் பணியில் சேர முடியாவிட்டாலும் பனிக்காலமாகவே கருதப்படும். அதேபோல் கொரோனா தொற்று இல்லாமல் மற்ற மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுத்து இருந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம். அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பணிக்கு வந்திருக்க முடியாது. இந்த காலம் முழுவதும் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும். இதனை பெறுவதற்கு உரிய மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும்.

மேலும் கொரோனா தொற்றுக்காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அரசு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதேபோல் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண் ஊழியர்களுக்கு சுழற்சிமுறை அடிப்படையிலான பணிகளை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசிலும் கர்ப்பிணிகளாக இருந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் பணிக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்களாகவே கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இணை நோய்கள் இருக்கக்கூடியவர்கள் 55 வயதிற்கு மேற்பட்டவர்களும் அரசு பணிக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணிக்கு வராத நாட்களும் வேலை நாட்களாகவே கருதப்படும். அதேபோல் கொரோனா காலத்தில் பணி நாட்களாக கருதப்படும் உத்தரவு அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பிரிவினருக்கும் பொருந்தும். அந்த வகையில் மாநில அரசுக்கு  உட்பட்டு வரக்கூடிய ஆணையகரங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கல்வி நிலையங்கள், சங்கங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும் என தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார்.