அமெரிக்கா அதிபரான ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இழுபறி ஏற்படாமல் இருந்தால் உடனே வாக்குகள் எண்ணப்பட்ட அடுத்த அதிபர் யார் என்று அறிவிக்கப்படும். மொத்தம் 50 மாகாணங்களில் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டனர்.

மீதமுள்ள 11 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். அமெரிக்க தேர்தலில் அதிபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக ‘Electoral College’ என்ற முறை மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அங்கு இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்து குறிப்பிட்ட எலக்ட்ரல் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்களும், 538 எலக்ட்ரால் பிரதிநிதிகளும் உள்ளன.

இந்த எலக்ட்ரல் பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகள் தான் எலக்ட்ரால் ஓட்டு என்று அறிவிக்கப்படும். எனவே இந்த 538 எலக்ட்ரால் பிரதிநிதிகள் வாக்குகளில் 270 க்கு மேல் யாருக்கு வருகிறதோ அவர்கள் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறார்களோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து ‘Electoral College’ வாக்குகளும் அளிக்கப்படும். உதாரணத்திற்கு, டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளை பெற்றிருந்தால், அவருக்கு மாகாணத்தின் 40 கலெக்டர் வாக்குகளும் வழங்கப்படும்.