திருச்சி அசூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சண்முகத்திற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது உடல் மருத்துவமனையில் உள்ளது.

இது குறித்து அவரது மகள் ஷாலினி கூறியதாவது, அப்பா எப்பொழுதும் படிப்பு தான் முக்கியம் என்று கூறுவார். அதனால் அவரது கூறியதை நிறைவேற்றுவதற்காக இன்று பொதுத்தேர்வு எழுத நான் பள்ளிக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.