செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, 2024 நாடாளுமன்றத் தேர்தலே இன்னும் வரவில்லை. அதற்கே இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சியை நடத்தி,  முப்பது ஆண்டுகாலம் முதலமைச்சராக பொறுப்பேற்று,

இந்த தமிழகம் இந்திய துணை கண்டத்தில் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்த இந்த மாபெரும் இயக்கத்தை தொடர்ந்து,  தமிழ் மக்களுக்கு பணியாற்றுவதற்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று 2026லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் போற்றுதலுக்குரிய  எடப்பாடி அவர்கள் உறுதியாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொதுவாக ஒரு கூட்டணியை விட்டு விலகி வந்த உடனேயே ஒரு சில கட்சிகள் உடனடியாக குறை சொல்லும். நேற்று வரை அவர்களோடு நன்றாக இருந்திருப்பார்கள். இன்று கூட்டணி இல்லை என்று சொன்னவுடனே பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை சொல்வார்கள்.  எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நாகரிகம் இல்லாதவர்கள் அல்ல. அனுபவசாலிகள். மற்றவர்களை மதிக்கக் கூடியவர்கள். பேரறிஞர் அண்ணா பெருந்தகை சொன்னது போல,

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு” என்று சொன்ன அந்த தலைவனை தலைவராக ஏற்றுக் கொண்ட தொண்டர்கள் நாங்கள். எனவே நேற்று வரை அவர் எங்களோடு இருந்திருக்கிறார். ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள், அவருடைய அணுகுமுறை, அவர்கள் மற்ற  தலைவர்களை மதிக்கக்கூடிய தன்மை, கிட்டத்தட்ட இரண்டு கோடி தொண்டர்களுடைய இயக்கத்தை….  அந்த மாநில தலைமையாக இருக்கட்டும்,  மற்றொருகளாக இருக்கட்டும்…  மதிக்கக்கூடிய தன்மை…  அதிலே பங்கம் விளைவிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வருகின்றபோது,  எப்படி நாங்கள் கூட்டணியில் இருப்போம் ? என தெரிவித்தார்.