பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமீபத்தில் அரையாண்டு நடந்தது. இந்த தேர்வு கடந்த 23ம் தேதி  நிறைவு பெற்றது. அதன் பின் 24ம் தேதியிலிருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த இடப்பட்ட விடுமுறை நாட்களில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார் வருகின்றது.

இதற்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற பள்ளி விடுமுறையின் போது, வகுப்புகள் நடத்தக் அனுமதி இல்லை, மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.