மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர். இது தொடர்பாக அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களின் முகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருக்கும் இடம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்றனர். அப்போது வீரபாண்டி மற்றும் சூர்யா இருவரும் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்றதால் அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது இருவரும் கீழே விழுந்ததில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.