தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும் பயணம் செய்வதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்கள் அவற்றை பெற்று பயணம் செய்ய வேண்டும் என்றும் சாலை விதிகளை மீறிய மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.