
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாக்கால் மடம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பாலகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த வயலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் பாலகிருஷ்ணன் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து அறிந்த மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகபிரியா மற்றும் பொதுமக்கள் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயத்துடன் அதிசயமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.