மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஷானாஸ் கான்(24), சோட்டு கான் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் சோட்டு கான் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சோட்டு கான் தனது மனைவியை பெட்ரூமுக்கு அழைத்துள்ளார். அதன் பின் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சோட்டு கான் கத்தியை எடுத்து, ஷானாஸின் இரு கண்களிலும் குத்தியுள்ளார். அதோடு அவருடைய பிறப்பகுதியிலும் குத்தியுள்ளார். இதையடுத்து  அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஷானாஸ் கானின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து ஷானாஸ் கானின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோட்டு கானை தேடி வருகின்றனர்.