சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டுவர பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் மற்றும் நாக்பூரில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை முன் மாதிரியாக கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்திலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கவும் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வந்தால் பயணிகளுக்கு ஏற்படும் காலவிரயத்தை தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.