
தேங்காய் தண்ணீரை பலர் வெளியே கொட்டி விடுகிறார்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டால் இனிமேல் வீணாக்க மாட்டீர்கள். தேங்காய் தண்ணீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் அதாவது சமநிலையில் இருக்கும். உடம்பில் கெட்ட கொழுப்பு சேராது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து விடுகிறது.
வாயு தொல்லையை அகற்றி விடுகிறது. செரிமான கோளாறு நீக்கி விடுகிறது. மேலும் பல், ஈர் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தையும் விலக்குகிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழித்து நமது உடம்பை பாதுகாக்கிறது. தைராய்டு, ஹார்மோன் சுரப்பை அதிகரித்து உடம்பில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது. உடம்பில் வறட்சியை போக்கி நீர் சத்தை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல் நம் உடம்பு பொலிவுடன் திகழுமாம். இப்படி பல்வேறு உடல் நலன்களை தரும் தண்ணீரை கொட்டி விடாமல் பருகி விடுங்கள்.