தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவருக்கும் இவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் விஜயை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த படங்கள் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பெல்லி சந்தடி என்ற தெலுங்கு ரீமேக் படத்தின் உரிமையை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு விஜயிடம் அவர் கூறிய நிலையில் ரொம்ப பழைய கதையாக இருக்கிறது கண்டிப்பாக அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிவிட்டாராம்.

ஆனால் எஸ்ஏசி விஜயிடம் கண்டிப்பாக இந்த படத்தில் நீ நடிக்க வேண்டும் என கூறியதால் வேறு வழியின்றி விஜய் அந்த படத்தில் நடித்துள்ளார். அதாவது கடந்த 1998-ம் ஆண்டு விஜய், ரம்பா, தேவயானி  நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தில் தான் விஜயை கட்டாயப்படுத்தி எஸ்ஏசி நடிக்க வைத்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதேபோன்று பவித்ர பந்தம் என்ற தெலுங்கு ரீமேக் படத்தின் உரிமையையும் எஸ்ஏசி வாங்கி தன்னுடைய மகனை நடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த படத்தில் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது நான் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியுள்ளாராம்.

ஆனால் இந்த படத்தில் நடித்தால் உன்னை பற்றி தான் அனைவரும் பேசுவார்கள். உன்னுடைய சம்பளமும் உயரும் என்று விஜயிடம் எஸ்ஏசி கூறி படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். அந்தப் படம் தான் பிரியமானவளே. விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த பிரியமானவளே திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்ததோடு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் தன்னுடைய மகன் எந்த படத்தில் நடித்தால் வெற்றி பெறுவார் என்பது எஸ்.ஏ சந்திரசேகருக்கு தெரியும். ஆனால் பிரச்சினையின் காரணமாகத்தான் விஜய் தன்னுடைய அப்பாவை கதை கேட்க வேண்டாம் எனக் கூறி நிறுத்தி வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.