அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.   முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை  நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே ”முன்னாள் அமைச்சர்கள்” என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர் உடைய ஒப்புதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒன்றாக பார்க்கப்பட்டது.ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் தான் சிபிஐ மேற்கொண்டு நீதிமன்ற விசாரணை நடத்த முடியும் என்ற ஒரு சூழ்நிலையானது இருந்து வந்தது.

ஆளுநர் அந்த கோப்புகளுக்கு நீண்ட நாட்களாக ஒப்புதல் கொடுக்காமல் பல மாதங்களாக கிடப்பிலே வைத்திருந்தார். எனவே அந்த கோப்புகளுக்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என திமுக அரசு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தது.  ஏற்கனவே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக தொடர்ந்து திமுக அரசு குற்றம் சாட்டை முன்வைத்து வந்தது.

இந்த நிலையிலே ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை பாதுகாக்கிறாரா ? அவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் ஏன் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கின்றார் ? அவர் ஒப்புதல் கொடுத்தால் தான் சிபிஐ மேற்கொண்டு தங்களுடைய விசாரணையை மேற்கொள்ள முடியும்.  ஆனால் அவர்கள் நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள முடியாத வகையிலே ஆளுநர் கோப்புகளை அப்படியே நிறுத்தி வைத்திருக்கின்றார்.  இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக செயல்பட வேண்டும், நேர்மையாக செயல்பட வேண்டும் என்றெல்லாம் திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பத்திரிகையாளர் சந்திப்புகளை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையிலே ஆளுநர் பல மாதங்களுக்கு பிறகு தற்போது அந்த கோப்புகளுக்கு அனுமதி என்பது கொடுத்திருக்கின்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில்  11வது முறையாக சிபிஐ வாய்தா கேட்டது என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் என்பது வெளியாகி இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் தகவலானது வெளியாகி இருந்தது. ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்கக்கூடிய சூழல் இருந்தது.

ஏனென்றால் முன்னாள் அமைச்சர்கள் என்ற அடிப்படையிலே அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னால் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். மாநிலத்தினுடைய ஆளுநர் ஒப்புதல் தந்தால் தான் முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை என்பதை நடத்த முடியும்.  அந்த வகையில் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் சிபிஐ தவிர்த்து வந்தது. ஆனால் தற்போது ஆளுநர் ஒப்புதல் கிடைத்துள்ளதால் சிபிஐக்கு விசாரணை நடத்துவதில் எந்த தடையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா தரப்பினரும், அதிமுக வட்டாரமும் நடுங்கி போய் உள்ளது.