
ஒடிசா ரயில் விபத்தில் ஏராளமான ஒரு உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு ஒடிசா இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்கள் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மூலம் ரத்த தானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அன்பு தம்பிகள் அனைவரும் ஒடிசா ரயில் விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.