
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நாய்களின் கூட்டத்தை நோக்கி சுட்டார். அப்போது நாட்டு இன நாய் ஒன்றிற்கு முதுகில் குண்டு பாய்ந்தது.
இதனால் அந்த நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் நாயின் உரிமையாளர் ராதிகா சுப்பிரமணியத்திடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நாயின் உரிமையாளரை அவதூறாக பேசிய நிலையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.