
தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே.. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற பொழுது…
தேர்தல் அறிக்கை கொடுத்த போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்று தான் மக்கள் புரிந்து கொண்டார்கள், நாங்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறோம் என பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மாண்புமிகு உதயகுமார் வீட்டு அம்மாவுக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வேணுமா? அப்பாவு வீட்டுஅம்மாவுக்கும் 1000 ரூபாய் வேணுமா? இது எல்லாம் மனசாட்சியை தொட்டு, நியாயமா என சொல்லுங்க.
ஜாதி – மதம் – இனம் – கட்சி – ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என பார்க்காமல் வெளிப்படை தன்மையோடு நடந்த ஒரு நிகழ்வில் முதலமைச்சர் சொன்ன மாதிரி, ஏதும் குறைபாடுகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் சுட்டி காட்டி ஆரோக்கியமாக சாமானிய மக்களுக்கு கிடைக்க உதவிட வேண்டும் என்று சொல்லுகிறேன், பேசுங்க என தெரிவித்தார்.