தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா நடிப்பில் ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

நடிகை திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் தன் தந்தையுடன் இருக்கிறார். மேலும் திரிஷாவின் குழந்தை புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.