
மத்திய அரசால் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY). இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் சாமானிய மக்களின் குடும்பங்களிலும் பெண்கள் சிரமப்படாமல், அவர்களது நலனை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது குறித்த நடைமுறைகள் பின்வருமாறு,
1. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரருக்கு கட்டாயமாக ரேஷன் கார்டு இருக்க வேண்டும் விண்ணப்பதாரரின் பெயரில் ஏற்கனவே எந்தவித எரிவாயு இணைப்பும் இருக்கக் கூடாது.
3. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஆதார் கார்டு ,பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிபிஎல் ரேஷன்கார்டு, வங்கி பாஸ்புக்,மொபைல் நம்பர், குடியிருப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியன
4. http://www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று உஜ்வாலா யோஜனா 2.0 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. அதன் பின் மொபைல் நம்பர் மற்றும் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை எண்டர் செய்ய வேண்டும்
6. அதன் பின் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து நகல்களை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும்.
7. பிறகு விண்ணப்ப படிவத்தை நகலெடுத்து அருகில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
8. அதன்பின் எரிவாயு நிறுவனம் உங்களது விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து தகுதி உடையவராக இருந்தால் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இதனை அவரவர் பகுதியில் உள்ள எல்பிஜி எரிவாயு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.