
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது நடிகை சமந்தா சிட்டாடல் எனும் ஹிந்தி வெப் தொடரிலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து குஷி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவுக்கு ஏற்கனவே ஹைதராபாத்தில் சொந்த வீடு இருக்கும் நிலையில் மும்பையிலும் 15 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியதாக அண்மையில் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது சென்னையிலும் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களில் தன்னுடைய பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதற்காக சென்னையிலும் நடிகை சமந்தா வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா தற்போது உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.