வெயில் காலங்களில் வாகனங்கள் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை வெப்பம் தொடங்கியதுடன் வாகனங்கள் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்ப வேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகம் இணையத்தில் வலம் வந்து விடும். இந்த நிலையில் வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்து விடும் என பரவிய செய்தி உண்மையில்லை எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த எச்சரிக்கை வாசகம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது எனவும் அதை நம்பவும் பகிரவும் வேண்டாம் என அறிவு படுத்தப்பட்டுள்ளது.