
தேனி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கழக கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சேர்ந்து எப்படியாவது ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக்கழக கட்சியை கொண்டு வந்துள்ளனர்.
விஜய் பாஜக கட்சியை குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாக தான் செயல்படுகிறார்.
அதாவது திமுகவினர் மத்திய அரசு குறித்தும். பிரதமர் குறித்தும் அவதூராக பேசுகிறார்களோ, அதே மாதிரி தான் திமுகவின் வேலையை மற்றொரு தளத்திலிருந்து கொண்டு விஜய் செய்து வருகிறார்.
எனவே திமுகவின் A டீம் தான் விஜய். இவரைப் போன்றே கடந்த கால தேர்தலுக்கு நடிகர் கமலஹாசன் தயார் செய்யப்பட்டார். தற்போது ராஜ்ய சபா சீட்டுக்காக மானஸ்தன் கமல்ஹாசன் எப்படி திமுகவில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜயம் கூடிய விரைவில் திமுகவிடம் ஐக்கியமாவார். வரும் தேர்தலில் அவருக்கு 2% அல்லது 3% ஓட்டு கிடைக்கும் அது எந்தவித சாதகப் பாதகத்தையும் ஏற்படுத்தாது என கூறினார்.