தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அஞ்சு வருஷத்துக்கு முன்னாள்….  எடப்பாடி இந்த பொறுப்புக்கு வந்ததிலிருந்து அவர் சந்தித்த தேர்தல் அனைத்திலுமே தோல்வி.  அதற்கு பின்னால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் என்ன நடந்தது ? என்ன நடந்தது…  நம்மளை வேண்டிக்கொண்டார்கள். நீங்க பிரிஞ்சி நின்னு ஓட்டை பிரிச்சிங்கனா ஜெயிக்க முடியாது. DMK ஜெயிச்சிரும். அதனால நீங்க வாபஸ்  வாங்குங்க என வேண்டுனாங்க, வாபஸ் வாங்குனோம். 

இரட்டை இலை சின்னம் கொடுத்துட்டாங்க…   ஜுட்ஜ்மெண்ட்டும் கொடுத்துட்டாங்க. சரி நின்னு பாக்கட்டும் அவங்க அப்படினு வாபஸ் வாங்கினோம். TTV தினகரன் அவரும் வாபஸ் வாங்கிட்டாரு. TTV கிட்டயும் போய் சொல்லி வாபஸ் வாங்கியாச்சி… எல்லாம் கொடுத்தாச்சி,  ஜெயிக்க முடிச்சிச்சா? கொங்கு பெல்டல. அம்மா சேவல் சின்னத்தில் நிற்கும் போது ஈரோடு மாவட்டத்தில அஞ்சு தொகுதி ஜெயிச்சுது.

அதிமுக ஜா அணி, ஜெ அணி என பிரிஞ்ச போது  5 தொகுதியில் வெற்றி பெற்றது.  ஈரோடு மாவட்டம் புரட்சித்தலைவி அம்மா அவருடைய கோட்டையாக திகழ்ந்தது. இன்னைக்கு என்ன நிலமையாயிருச்சு ?  66 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல படு தோல்வி  இரட்டை இலை சின்னத்திற்கு.  இவ்வளவு பெரிய இயக்கத்தை… 50 ஆண்டுகால சரித்திரத்தை உருவாக்கிய இயக்கத்தை படுபாதாலத்தில் தள்ளிட்டாங்க.

வரலாறு படைத்த இயக்கத்தை….  வரலாறு படைக்க இருக்கின்ற இயக்கத்தை…  இப்படி கொண்டு போய் கீழே  தள்ளிடியே எடப்பாடி பழனிசாமி. உன்னை நாடு மன்னிக்குமா ? புரட்சித்தலைவர் ஆன்ம,  புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆன்மா மன்னிக்குமா? மன்னிக்காது .நீ குவித்து வைத்திருக்கின்ற பணம் உன்னை காப்பாற்றாது.

மாநாட்டுக்கு வந்தவுங்களுக்கு நல்ல உணவு கூட கொடுக்க முடியாத நீ, வந்த வழியெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும். கிராமத்துல இருக்குறவங்க பேசுறாங்க. இதை நாம் ஓப்பனாக பேச முடியாது…  .வெளிப்படையாக பேச முடியாத கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரே தீர்வு, மக்கள்  மன்றம் என தெரிவித்தார்.