திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரபல பேச்சாளரும், முக்கிய பொறுப்பில் இருப்பவருமான தமிழன் பிரசன்னா,  பராசக்தி கதையில் குணசேகரனுடைய அண்ணன் வந்து எல்லாரும் குடும்பமாக சேர்ந்து விட்டோமே,  வாருங்கள் நாம் போவோம் அப்படினுற போகிற போது,  ஒரு வரி சொல்லுவார். எங்கே அண்ணா போகிறாய் ?

எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டோமே வா, இதுதான் உன் வீடு அப்படின்னு ஜட்ஜ் அண்ணன் வந்து சொல்லும்போது,  சொல்லுவாரு… இந்த மாடமளிகை கோபுரங்கள் எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் இல்லாத போது என்னோடு இருந்தது தோழர்கள்,  இந்த பிச்சைக்கார தோழர்கள் தான். அடுத்த மாதம் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு மாநாடு நடத்த போகிறோம்.

அதற்கு நிதி திரட்ட போகிறோம் என்ற ஒரு வசனத்தை சொல்லி இருப்பார். அன்னைக்கு அவர் முதலமைச்சர் அல்ல,  ஆட்சிக்கு வந்தவுடன் அவர் கையெழுத்திட செய்தி என்ன தெரியுமா ?  பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு திட்டம். கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்று அன்னைக்கு எழுதினார்.

ஆம் கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருந்து விடக்கூடாது. அண்ணன் சேகர் பாபு போன்ற நல்லவர்கள் கையில் கோவில் போக வேண்டும் என்று இன்றைக்கு இந்து அறநிலையத்துறை கொடுத்திருக்கிறார். எங்கள் ஆட்சியின் மீது வீசிய சாணம் எது ? ஹிந்துக்களுக்கு விரோதி. அண்ணன் சேகர்பாபுவை  முன்னிறுத்தி,  முதலமைச்சர் சொல்கிறார்…  அவரைப் பார்த்ததற்கு பிறகுமா எங்களை இந்துக்களுக்கு விரோதி என்கிறீர்கள்,  என்ற ஒற்றை ஆவணம் போதும் நண்பர்களே என பேசினார்.