செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், நான் முன்பே சொன்னது போல்,  அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குது. அதுக்கு அப்புறம் மாநிலத்தினுடைய முதல்வர் இன்னொரு முடிவு எடுக்கிறார். அப்புறம் முன்னால எடுத்து முடிவை  திரும்ப மாத்துறாங்க. இது ஒரு யு டர்ன் அரசாங்கம் அப்படிங்கறதுக்கு இதெல்லாம் ஒரு உதாரணமாக இருக்கு.

அக்டோபர் 20ஆம் தேதி நான் ஒரு அறிக்கை கொடுத்திருக்கேன்….  அரசினுடைய கொள்முதல் எவ்வளவு குறைந்திருக்கிறது ? நீங்க ஒரு பக்கம் ஆவின் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் சொல்கிறார்….  ஆவின் நிர்வாகம் மக்களுக்கு பால் கொடுக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும்,  விவசாயிகளிடம் பால் வாங்குவதை ஏன் குறைத்துக் கொண்டீர்கள்?

அப்படிங்கிறதுக்கு எந்த பதிலும் கிடையாது…  அப்போ நீங்க பாரதி ஜனதா கட்சி இந்த விஷயத்தை எடுத்தால்,  எங்க மேல அபாண்டமாக குற்றச்சாட்டு சொல்றீங்க…  மாநில தலைவர் மேல் ரொம்ப தரக்குறைவான விமர்சனத்தை அமைச்சர் வைக்கிறார். மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சிகள் உடைய வேலை. இது நாங்கள் சொல்லும் போது அதற்கு எப்படி வந்து சரியான பதில் அளிப்பது என்பதை விட்டுவிட்டு, தனிநபர் தாக்குதலில் இறங்குவது கண்டிக்கத்தக்கது.

அமைச்சர்கள் அவர்களுடைய மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குறைகளை சுட்டி காட்டினால் அது என்ன பிரச்சனையோ, அதற்கு தீர்வு கொடுப்பதுதான் வேலையாக இருக்கணுமே தவிர….  அதை விட்டுவிட்டு அவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் அரசியல் அநாகரிகம் அற்றது என தெரிவித்தார்.