செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கொடுத்த வாக்குறுதியை நிதிநிலை சரியில்லை என DMK அரசு செய்யவில்லை. அரசியல்ல பல காலம் இருக்கிறவங்க அப்படின்னு சொல்றாங்க….  எம்எல்ஏவா இருந்திருக்காங்க…. எதிர்க்கட்சி தலைவரா இருந்திருக்காங்க….. சட்டசபையில் உள்ளே உட்கார்ந்து நிதி நிலை அறிக்கையெல்லாம் பார்த்தவங்க….  அப்போ எல்லார் கையிலேயும் ஒரு புத்தகமே குடுப்பாங்க. அதனால அதை படிச்சி இருக்கலாம்.

எனக்கென்னமோ அதை படிச்சு பார்த்திருந்தாங்கன்னா….  அவங்க  இந்த தேர்தல் அறிக்கையை நிச்சயமா கொடுத்திருக்க மாட்டாங்க.  செய்யறதுக்கு மனசு ஆசைதான். அதனால் எதோ ஒன்னு செய்வோம்,  அதுதான் முடியும். நிதிநிலை அவ்வளவுதான் இருக்கு. அப்படின்னு சொல்லி இருக்கலாம். அவங்களுக்கு என்ன ? ஆட்சிக்கு வந்தாகணும்.  என்ன பொய்யோ,  என்னமோ சொல்லிடுவோம்ன்னு சொல்லிட்டு வந்துடுவோம்னு சொல்லுறாங்க…

இப்ப வந்ததிலிருந்து என்ன ?  மக்களினுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு இருந்தாங்க, இதுதான் நடந்துட்டு இருக்கு. இதை மீடியாகாரங்களும் எதனால ரொம்ப சொல்ல மாட்டேங்கிறாங்கன்னு தெரியல.  அதே போல எதிர்க்கட்சிகளும் ஏன் அப்படி இருக்காங்கன்னு எனக்கு தெரியல ?  எதிர்க்கட்சி என்றால் என்ன ?

கிட்டத்தட்ட 99%   திமுகவோடு கூட்டணியில் இருக்காங்க….  அவங்க கூட்டணி தர்மத்தை பார்க்கிறார்கள், மக்களை பாக்கல. ஆனால் எல்லோரும் சேர்ந்து தானே நாளைக்கு வாக்கு கேட்க போவீங்க… மக்கள் கிட்ட தானே போய் ஆகணும். அப்ப மக்கள் சரியான பாடத்தை நிச்சயம் புகட்டு வாங்க, அதுதான் நடக்க போகுது என தெரிவித்தார்.