
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டினோம். திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தது. 1100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மூன்றாவது கூட்டநீர் திட்டம் அதிமுகவால் தொடங்கப்பட்டது. அதையும் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தார். கோவையில் திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. ஆனால் அதை திறந்து வைத்தது திமுக.
திமுகவால் எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. கூட்டணி பலமாக உள்ளதாக அடிக்கடி ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் கூட்டணியை நம்பி கொண்டிருக்கிறீர்கள் நான் என் மக்களை நம்புகிறேன். மக்கள் தான் வாக்களித்த ஆட்சியை அமைக்க முடியும் கூட்டணி அல்ல. கூட்டணியில் உள்ள குட்டி காட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்துக்கொண்டு அடிக்கடி குரல் கொடுக்கிறது. தமிழகத்தை மீட்போம் என்கிறீர்களே எப்படி என்கிறார்கள்.
தேர்தல் மூலம் தான் மீட்போம் என்ற ஏனென்றால் கொடுமையான கொடுங்கால் ஆட்சி நடக்கிறது. மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முடியாத அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் பொம்மை முதல்வராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தமிழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது. அதிலிருந்து மீட்போம் அதுதான் லட்சியம். அதனால் உங்கள் கட்சியை போல எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.