
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி 1998ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றது. NDAவின் உடைய தன்மை என்பது வேறு. வேறு காலத்தில் மாறி இருக்கிறது. நிறைய கட்சிகள் வந்திருக்கிறார்கள். நிறைய கட்சிகள் போயிருக்கிறார்கள். நிறைய கட்சிகள் பரிமாணத்தோடு மறுபடியும் வந்திருக்கிறார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணி 2024 தமிழகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு.. மிகப்பெரிய அளவில இங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைப்போம். மற்றபடி கூட்டத்தில் என்ன பேசினோம்.
தலைவர்கள் என்ன பேசினார்கள் ? பத்திரிக்கையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீங்களும் புரிந்து கொள்வீர்கள். ஒரு பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு அது தெரியும். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை NDAவை பிரதானப்படுத்தி போவோம். 2024இல் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இங்கே முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் 2024 தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024 வரக்கூடிய வெற்றி பெற்ற வேட்பாளர்களை பார்ப்பீர்கள். வாக்கு சதவீதத்தை பார்ப்பீர்கள்.
எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று பிரிந்தவர்கள் நாளை சேரலாம். 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கும். பாஜகவை வளர்ப்பது எனது நோக்கம். பிரிந்து செல்பவர்களை பற்றி கவலை இல்லை. எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். தமிழகத்தில் பாஜக – திமுகவுக்கு மட்டும் தான் போட்டி என இரண்டு ஆண்டுகளாக கூறி வருகின்றேன் என தெரிவித்தார்.