திமுக ஆட்சியில் எங்கே பார்த்தாலும் ஊழல்தான் என்பது மக்களுக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் SPவேலுமணி விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர்களின் ரூ.1.343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை இன்று அண்ணாமலை வெளியிட்டார். அதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். மேலும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிட போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவாக இருந்தாலும், அண்ணாமலையாக இருந்தாலும் நாங்கள் எல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. கடுமையாக ஊழல் எல்லா பக்கமும் பரவி இருக்கிறது. இது அனைத்து மக்களுக்கும் தெரியும். அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் திமுக காரர்கள். கண்டிப்பாக இதற்கெல்லாம் முடிவு வரும் என்றார்.