திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடப்பாரை 1, மண்வெட்டி 1, இருப்புச் சட்டி 1, கதிர் அருவாள் 2 உள்ளிட்ட ஐந்து வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3,000 ஆகும்.

இந்த பொருட்கள் 50% மானியம் போக ரூ.500-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.