சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உலகின் மிக அசுத்தமான நாடு எது? என தெருவோரங்களில் செல்லும் மக்களிடம் ஒருவர் கேட்ட நிலையில் பெரும்பாலானோர் “இந்தியா” என்று பதிலளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா குறித்து வெளிநாட்டு மக்களிடம் நிலவும் தவறான எண்ணங்களை முறியடிக்கும் முயற்சியில் ஒரு பிரெஞ்சு இணையதள பயனர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இந்தியாவின் புதுமையான கட்டிடங்கள், சுத்தமான சாலைகள், பராமரிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் நகரப் பகுதிகள் ஆகியவற்றை அழகாக காட்டிய அவர் “இந்தியாவை விமர்சிப்பதற்கு முன்பு நேரில் வந்து பாருங்கள்” என்று கூறினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Icy French (@icyfrenchreal)

“ஒரே ஒரு நகரின் குறைபாடுகளால் ஒரு நாடு முழுவதையும் மதிப்பீடு செய்ய முடியாது, குறை கூறாமல் ஊக்கமளிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி” என்றும் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இன்னொருவர் “இந்தியாவில் சில இடங்கள் அசுத்தமாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அழகான பராமரிக்கப்பட்ட இடங்களும் அதிகமாக இருக்கின்றன” என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருந்தார்.