
செல்வராகன் தென்னிந்தியாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 5 மார்ச், 1977 பிறந்தார். செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் காதலித்து டிசம்பர் 15, 2006-இல் திருமணம் செய்து கொண்டனர். ஆகஸ்ட் 9, 2009 அன்று, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் சோனியாவும் செல்வாவும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். மார்ச் 12, 2010 அன்று, அதாவது, 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. பின்னர், செல்வாவுக்கும், கீதாஞ்சலி ராமனுக்கும் ஜூலை 3, 2011-ல் திருமணம் நடந்தது.
அவர் தனது முதல் முயற்சியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அவரது அடுத்த படம், காதல் கொண்டேன், பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன வெற்றி பெற்றது. பெரும்பாலான தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது இயக்கும் திறனை பாராட்டினர்.
2002 – துள்ளுவதோ இளமை
2003 – காதல் கொண்டேன்
2004 – 7ஜி ரெயின்போ காலனி
2006 – புதுப்பேட்டை
2007 – ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே”
2008 – யாரடி நீ மோகினி
2010 – ஆயிரத்தில் ஒருவன்
2011 – மயக்கம் என்ன
2013 – இரண்டாம் உலகம்
2016 – மாலை நேரத்து மயக்கம்
2016 – நெஞ்சம் மறப்பதில்லை
2019 – என்.ஜி.கே