டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று தேசிய தொழில்நுட்ப வார கண்காட்சியின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், இந்தியாவில் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகரித்து வருவதால் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்க ஒரு பொறிமுறை அமைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை நெருக்கமாக பின் தொடரவும், அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் செயல்படவும் இந்த பொறிமுறை உருவாக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் டெல்லியில் கடந்த 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப வார விழாவினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.