குரோசியாவில் கோர்குலா என்ற கடற்கரை தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2021-ம் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வைத்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜாதர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய சோலின் பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு ஒரு வியக்கத்தக்க விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 7000 ஆண்டுகளுக்கு முந்தைய 13 அடி அகலம் உள்ள நெடுஞ்சாலையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நெடுஞ்சாலை Hvar கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். தற்போது நீரில் மூழ்கி இருக்கும் இந்த நெடுஞ்சாலை கோர்குலா தீவின் இணைப்பு பாதையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சாலைக்கு கிமு 4900-க்கு முந்தையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதன்படி கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முன்பாகவே கற்கள் மற்றும் பலகைகளால் அடுக்கடுக்காக அற்புதமான சாலையை வடிவமைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.