இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலங்கானாவின் செகந்திராபாத் மற்றும் ஆந்திராவின் திருப்பதி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் 16 பெட்டிகளுடன் இம்மாதம் 17ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருத்தப்பட்ட நேரங்கள் IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். இந்த ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை மதியம் 2.30 மணிக்கும் சென்றடையும். திருப்பதியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.