நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி மற்றும் கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது