சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனியும், டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லி வீரர்களிடம் எம்.எஸ் தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளனர். அவர்களும் எம்.எஸ் தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளனர்.

அதன்படி தோனியை இஷாந்த் சர்மா பிக் பிரதமர் என்றும், அக்சர்படேல் மிஸ்டர் கூல் என்றும், மிட்செல் மார்ஷ் லெஜெண்ட் என்றும், சர்ஃபராஸ் கான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.