
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். இவர் தற்போது நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் உள்ளிட்டவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்று இருந்த கோவிந்தா பாடல் திருப்பதி ஏழுமலையனை அவமதிப்பது போன்று இருப்பதாக ஜனசேனா கட்சியினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நடிகர் சந்தானத்தின் மீது வழக்கு தொடர்ந்ததோடு கோவிந்தா பாடலுக்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டுமென்று கூறியது.
இது பற்றி நடிகர் சந்தானம் கூறும்போது யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவிந்தா பாடல் இடம் பெறவில்லை எனவும், நான் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவன் என்றும் கூறியிருந்தார்.