
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கர்ஜகி கிராமத்தில் வசித்து வந்தவர் பீபிஜா சோண்டி (18). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பீபிஜாவிற்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பீபிஜா புகையிலை பழக்கத்திற்கு அடிமையானது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதனால் பெற்றோர் பீபிஜாவை கண்டித்துள்ளனர். இருந்தும் தொடர்ந்து புகையிலை பழக்கத்திற்கு பீபிஜா அடிமையாகியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் பெற்றோர் பீபிஜாவை கடுமையாக திட்டி உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் கோபப்பட்டதால் மனம் உடைந்த பீபிஜா சம்பவ நாளன்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து காவேரி புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த காவல்துறையினர் பீபிஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பெற்றோர் புகையிலைபழக்கத்தை கண்டித்ததால் பீபிஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது