சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  தற்போது மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் தலைமை செயலகத்தில் இருந்து காரின் மூலம் அடையார் சென்று,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக விமான நிலையம் சென்று,  விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்று இந்திய பிரதமரிடம் தமிழகத்தினுடைய வெள்ள பாதிப்பு குறித்தும்,

நான்கு மாவட்ட பாதிப்பு குறித்தும் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், தமிழக முதலமைச்சரும் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக சந்தித்து இருக்கின்றார்கள். மத்திய அரசு தன்னுடைய பிரதிநிதியாக பாதுகாப்புத்துறை அமைச்சரை அனுப்பி உள்ளார்கள்.  பார்லிமென்ட் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

நாளைக்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசு எடுத்தது என்று  மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தமிழகம் வெள்ள பாதிப்பு குறித்து திருச்சி சிவா பேசினாரு, டி.ஆர் பாலு பேசி இருந்தார்கள். எனவே நிச்சயமாக நாளைக்கு பார்லிமெண்டிலேயே எந்த மாதிரியான உதவிகள் மத்திய அரச சார்பில் எடுக்கப்பட்டது என்பது குறித்து பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ரீதியாக மாற்று கருத்துக்கள் இருந்தாலும்,  மக்களுக்கு என்று வரும்போது மத்திய அரசு மாநில அரசு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணமாகத் தான் இந்த சந்திப்பு  இருப்பதாக நம்மால் பார்க்க முடிகிறது. தலைமை செயலகம் விட்டு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் போர்டிகோ வரை சென்று வலி அனுப்பி வைத்துள்ளார்.  மத்திய  பாதுகாப்பு துறை வரும்போது தலைமை செயலகத்தின் பத்தாம் எண் வாயிலில் நேரடியாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசாகிய இரண்டு மூத்த அமைச்சர்கள் வரவேற்றார்கள்.

இப்பொழுது அவர்கள் புறப்படும் போதும் முதலமைச்சரை நேரடியாக வந்து மத்திய அமைச்சரவை அனுப்பிருக்கிறார். இதையெல்லாம் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அதாவது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள.  களத்தில் மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன. இந்த உறவு என்பது நிச்சயமாக நீடிக்க வேண்டும்.  அப்போதுதான் மக்களுக்கு  மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.