கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395 ரூபாயை முதலீடு செய்துள்ளார். இதுவரை அந்த முதலீட்டிற்கு 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மணி அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார்.

ஆனால் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு மாற்ற இயலவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த செயலி போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கி 15 3/4 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு மணியிடம் ஒப்படைத்தனர்.