விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சைபர் கிரைம் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சைபர் கிரைம் குறித்தும், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது, முன்னெச்சரிக்கையாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தெளிவாக மாணவர்களிடம் பேசியுள்ளார்.

இதுபோன்று குற்றங்கள் நடந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பள்ளி மாணவிகள், இளம் சிறார்கள், பாலியல் துன்பங்களுக்கு ஆளானால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள் என போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.