திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது, கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கக்கூடிய ரேஷன் கடை கட்டிடம் பல வருடங்களாக பலர் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.

இந்த ரேஷன் கடைகளில் வைக்கக்கூடிய பொருட்களில் மழை நீர் புகுந்த வீணாகிறது. மேலும் கட்டிடம் பால் அடைந்து எந்த நேரத்திலும் இருந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ரேஷன் கடை கட்டிடம் போக்குவரத்து மிகுந்த சாலை ஓரத்தில் இருப்பதனால் பொருட்கள் வாங்கும் பொழுது கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. அதனால் புதிதாக ரேஷன் கடை கட்டி கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.