மத்திய பல்கலைக்கழகம் இளங்கலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான CUET UG தேர்வு முடிவுகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 44 மத்திய பல்கலை கழகங்கள் மற்றும் 12 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 90 பல்கலைக்கழகங்களில் உள்ள 54 ஆயிரத்து 555 இடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மாணவர்கள் cuet. samarth.ac.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.