சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றி 4 தோல்வி ஒரு முடிவில்லை என்ற கணக்கில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதேபோன்று டெல்லி அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 4 வெற்றி மற்றும் 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருக்கும் நிலையில், ருதுராஜ், கான்வே, ரகானே, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாகர், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே ஆகியோர் அணியில் சிறப்பான முறையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று களம் இறங்கும். மேலும் இதேபோன்று டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் எப்படியாவது வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று களமிறங்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.