ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது வருகின்ற ஏப்ரல் 12-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது.

தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9-ம் தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. மேலும் சி,டி,இ,ஐ,ஜே,கே ஸ்டாண்டுகளில் 1500 முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.